நீங்க செயின் ஸ்மோக்கரா….அப்ப இவரு நிலைமை தான் உங்களுக்கும்….!

என்னதான் ‘புகை நமக்கு பகை’, ‘புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்’ என டிசைன் டிசைனாக எச்சரிக்கை வாசகம் காட்டினாலும் நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகரித்து வருகிறது என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

இதற்கிடையில் சீனாவைச் சேர்ந்த 52 வயது மனிதர் ஒருவர் சமீபத்தில் மரணமடைந்தார். அவருக்கு 30 வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கம் வேறு இருந்துள்ளது. இதற்கிடையில் அவரின் உடல் பாகங்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க மருத்துவர்கள் அகற்றிய போது அது அடர் கருப்பு நிறத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மருத்துவர்கள், ‘சிகரெட் புகைத்ததன் விளைவாகவே இப்படி மாறிவிட்டதாகவும், இதனை இனி யாருக்கும் பயன்படுத்த முடியாது’ எனவும் தெரிவித்தனர்.இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

Exit mobile version