அமமுக உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

மக்களவை தேர்தலில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து எடப்பாடி தொகுதிக்குட்பட்ட எட்டிக்கொட்டைமேடு, கண்ணியம்பட்டி, சமுத்திரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இந்த நிகழ்வின்போது சமுத்திரத்தை சேர்ந்த அமமுக இளைஞர் சித்தார்த்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்ற முன்னாள் ஒன்றிய தலைவர் கரட்டூர் மணி, சரவணனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version