யூ டியூப்பில் வீடியோ பார்த்து கள்ள சாராயம் தயாரித்த இளைஞர்கள்!!!

சமயநல்லூரில் யூ டியூப்பில் வீடியோ பார்த்து, கள்ள சாராயம் தயாரிப்பதற்காக, சாராய ஊறல்கள் பதுக்கிய 6 இளைஞர்களை காவல்துறையின கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே, சோழவந்தான் சாலையில் உள்ள வைகை ஆற்றங்கரையில், கள்ள சாராயம் தயாரிக்க ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், கள்ளச் சாராயம் தயாரிப்பதற்காக சாராய ஊறல்கள் குழி தோண்டி புதைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து, அழித்தனர்.

சாராய தாயரிப்பில் ஈடுபட்ட 6 இளைஞர்களையும் கைது செய்தனர். விசாரணையில், யூ டியூப்பில் வீடியோ பார்த்து, கள்ளச் சாராயம் தயாரிக்க முயன்றது தெரியவந்தது. தப்பியோடிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version