பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் மக்காச்சோள பைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, மக்காச்சோளத்திலான பைகளை கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பைகள், 6 முதல் 8 மாதங்களில் மக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதை உண்ணும் விலங்குகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். சிறிய ரகம், நடுத்தரம், பெரிய வகை பைகள் என ரகம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத வகையில் மக்காச்சோள பைகள் இருப்பதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.