திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே தோட்டக்கலை பயிரான கோழி கொண்டை மலரை சாகுபடி செய்வதில், பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியில் அதிக அளவில் தோட்டகலை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பட்டதாரி இளைஞரான ராஜ்குமார் என்பவர், கோழிக்கொண்டை மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் கோழிக்கொண்டை மலர்கள் மூலம், நாள்தோறும் 300 கிலோ வரை மகசூல் கிடைப்பதாக ராஜ்குமார் தெரிவித்தார். ஒரு கிலோ கோழிக்கொண்டை மலர், 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாவதால், நல்ல லாபம் கிடைப்பதாக அவர் கூறினார்.