கோவை அருகே செயின் பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குணியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி சுசீலா என்பவர், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட மூதாட்டி செயினை பலமாக பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டதால், அருகில் இருந்தவர்கள் திருடனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈட்டுபட்டவர், திருப்பூரைச் சேர்ந்த அம்சா என்பது தெரியவந்தது.