இங்கிலாந்தில் உலககோப்பை தொடர் கடந்த மே மாதம் 30ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யம் குறையாமல் பல சிறப்பான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றே சொல்லலாம்.
இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி களமிறங்கி விளையாடும் போது ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஏனெனில் கடந்த ஆண்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அப்போது கேப்டனாக இருந்த அவருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனை மனதில் கொண்டு ஸ்மித்தை “சீட்டர்….சீட்டர்” என ரசிகர்கள் விமர்சித்தனர்.
With India fans giving Steve Smith a tough time fielding in the deep, @imVkohli suggested they applaud the Australian instead.
Absolute class ? #SpiritOfCricket #ViratKohli pic.twitter.com/mmkLoedxjr
— ICC (@ICC) June 9, 2019
இதனை கவனித்த விராட் கோலி, அவரை சீட்டர் என்ரு சொல்வதை விட்டு விட்டு கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதனை பார்த்து மகிழ்ந்த ஸ்மித் கோலிக்கு நண்ரி தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் பேசிய விராட் கோலி, “என்றோ நடந்த சம்பவத்தை மனதில் வைத்து இப்படி நடக்க கூடாது” என கேட்டுக்கொண்டார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.