விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும் – நனவான முதியவர்கள் கனவு

திருப்பூரைச் சேர்ந்த 120 முதியவர்கள் முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்த அனுபவம், தங்கள் வாழ்வில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தேவராஜபாளையத்தை சேர்ந்த சுமார் 120 முதியவர்கள் கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான செலவை தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று செய்துள்ளதாக  பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும் என்ற முதியோர்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே இந்த பயணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சென்னை வந்த அவர்கள் மெரினா கடற்கரை மற்றும் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அண்ணா ஆகியோரின் நினைவிடங்களை சுற்றிப்பார்த்தனர். இரண்டாம் நாளான இன்று காஞ்சிபுரம் கோவில்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு விமானம் மூலம் கோவை திரும்புகின்றனர்.

Exit mobile version