மது அருந்தலாம் என வரச்சொல்லி, நண்பரை குத்திக்கொலை

சென்னை கூடுவாஞ்சேரியில் மது அருந்தலாம் என வரச்சொல்லி, நண்பரை குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது மகன் சீனிவாசன்.
அவரது மனைவி வெளியூர் சென்றிருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த, அவரது நண்பரான சூரியாவுடன் இரவு மது அருந்தியுள்ளார்.

சீனிவாசனும், சூரியாவும் நெருங்கிய நண்பர்கள்.இருவருமே தனியார் கம்பெனியில் டிரைவராக
வேலை பார்த்து வந்துள்ளனர்…

இருவரும் மது அருந்திக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு அதுவே
கைகலப்பாகியுள்ளது. ஒரு கட்டத்தில் சீனிவாசன் ஆத்திரமடைந்து அருகில் இருந்த கத்தியால் சூரியாவை கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்..

உயிருக்கு போராடிய சூரியா அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த வினோத் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை சொல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். வினோத் ஆம்புலன்ஸ் மூலமாக சூரியாவை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் சூரியா பரிதாபமாக உரயிரிழந்துள்ளார். தகவலறிந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் சீனுவாசனை கைது
செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version