தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமலுக்கு வர உள்ள நிலையில், இந்த திட்டத்தை தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்துகிறது.