தனியார் பள்ளிகளின் புதிய கல்வி கட்டண நிர்ணயம் குறித்து வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் சிறப்பு அதிகாரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும், அவர்களுடைய கட்டண நிர்ணயம் குறித்தும், வருகிற 20-ஆம் தேதி முதல் 25ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பதற்கு முன், 3 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண நிர்ணய விவரங்களை சமர்பிக்க 25ம் தேதிக்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.