பூர்வீக சொத்து விவகாரம் ; அண்ணனுக்கு எதிரான தம்பியின் காமெடி வில்லத்தனம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, பூர்வீக சொத்தை அண்ணன் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பி செய்துள்ள தரமான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரான்குளம் கிராமத்தில் வசிக்கும் சகோதர்கள், பொன்னாயா மற்றும் செளந்திராஜனுக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பூர்வீக சொத்தை விற்க அண்ணன் பொன்னையா ரகசியமாக காய் நகர்த்தி வந்துள்ளார்.

அதனை அறிந்த தம்பி செளந்திரராஜன் “களவாணி” பட பாணியில் இரவோடு இரவாக ஊரில் உள்ள சுவர்கள், தண்ணீர் தொட்டி, மின் கம்பங்கள் என எல்லாவற்றிலும்

“இது வில்லங்க சொத்து, வீணாக வந்து சிக்கி கொள்ளாதீர்கள்” என்று எழுதி விநோத பாணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது ஊர் மக்கள் உஷார்” என ஊர் முழுவதும் தம்பி வரைந்துள்ள விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version