ஏற்கனவே நயன்தாராவுடன் டூயட் பாடி ரசிகர்களை மிரள வைத்த யோகி பாபு, அடுத்ததாக ஜோதிகாவுடன் இணைகிறார்.
நகைச்சுவை நடிகராக தற்போது கோலிவுட்டை கலக்கிவரும் யோகி பாபு, கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவுடன் டூயட் பாடி, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று, ஏராளமான லைக்குகளை அள்ளியது. அதனால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு கூடி, படத்திற்கு வெற்றியை தேடித் தந்தது.
இந்த நிலையில், தற்போது ஜோதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில், யோகி பாபு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் ஜோதிகா கதாநாயகி என்பதால், அவருடனும் டூயட் பாடுவாரா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், படக்குழு இதைப் பற்றி எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.