முதல்முறையாக இரட்டை வேடத்தில் யோகி பாபு எந்த படத்தில் தெரியுமா ?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகனாக இருக்கும் யோகி பாபு முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக யோகி பாபு வலம் வருகிறார்.. இவர்  ரஜினி விஜய் அஜித் சூர்யா தனுஷ் என அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்… கடந்த ஆண்டு மட்டும் விஸ்வாசம் ,பிகில் , ஜாக்பாட் , நம்ம வீட்டு பிள்ளை , மிஸ்டர் லோக்கல் , கோமாளி, தனுசு ராசி நேயர்களே போன்ற 30 படங்களில் நடித்துள்ளார் , அதில் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இன்று வெளியான ரஜினியின் தர்பார் படத்திலும் யோகி பாபு நடித்துள்ளார்.இவரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.. இந்நிலை கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் கிரிஷ்  மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவான டக்கர் படத்தில்  முதன் முதலாக இரட்டை வேடங்களில்  அதாவது தந்தை மகன் என்ற இரு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

Exit mobile version