தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் அந்தர் பல்டி அடித்து வேறு பேச்சு என விடியா திமுக அரசு, மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மணல், கம்பி, செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாகவும், ஏராளமான கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்பதாகவும் குற்றம்சாட்டினார். அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை என கூறிவிட்டு, தற்போது நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் அந்தர் பல்டி அடித்து வேறு பேச்சு, என விடியா திமுக மக்களை ஏமாற்றிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மக்களின் பேராதரவுடன் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
Discussion about this post