நிதி நெருக்கடியில் சிக்கி, ரிசர்வ் வங்கியால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட யெஸ் வங்கி, இன்று மாலை முதல் தனது வழக்கமான வாடிக்கையாளர் சேவையை தொடங்க உள்ளது.
கடந்த 5ஆம் தேதி யெஸ் வங்கியின் பணப்பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், அவ்வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், யெஸ் வங்கி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மார்ச் 18ஆம் தேதி மாலை 6 மணியுடன் விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருதது. இதனை அடுத்து, இன்று மாலை முதல் தனது வழக்கமான பணபரிவர்த்தனைகளை யெஸ் வங்கி தொடங்க உள்ளது.