கிருஷ்ணகிரியில் மஞ்சள் விளைச்சல் அமோகம் – உரிய விலை கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மஞ்சமேடு, பண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் செடிகள் அமோகமாக வளர்ந்துள்ளன. கடந்த ஆண்டுகளில் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்ததால் இந்தாண்டும் மஞ்சள் சாகுபடியை விவசாயிகள் அதிகளவில் செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் மஞ்சள் குலைகள் தரத்தில் சிறந்து விளங்குவதால் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

விளைச்சல் அமோகமாக இருந்தாலும் வேலை ஆள் கூலி, உரம் விலை என உற்பத்தி செலவு அதிகமாகியிருப்பதால், செலவுக்கேற்ற உரிய விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர்.

 

Exit mobile version