கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
கர்நாடகா மாநிலத்தில், பெலகாவி, பிஜப்பூர், பாகல் கோட்டை, ரெய்ச்சூர், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 21 மாவட்டங்களில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால் 21 மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனையடுத்து, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் எடியூரப்பா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் பேசிய எடியூரப்பா, வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் உறுதியளித்திருப்பதாக கூறினார்.