கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது
கர்நாடக முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 31ம் தேதி வரை அவருக்கு ஆளுநர் அவகாசம் கொடுத்தார். எனினும் 29ம் தேதியே பெரும்பான்மையை நிரூபிப்பதாக எடியூரப்பா அறிவித்திருந்தார். அதன்படி, இன்று சட்டப்பேரவை துவங்கியதும், எடியூரப்பா நம்பிக்கை வாக்கு கோரினார். சட்டப் பேரவையில் அங்கம் வகித்த 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 3 மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் என 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 208 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர். குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 105 உறுப்பினர்களின் ஆதரவுடன் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.