கர்நாடகா முதலமைச்சராக 4வது முறையாக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோரினார்.
அதன்படி, பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், 4வது முறையாக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.