கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, தானாகவே கவிழும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷ்வாவனி பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம், பத்திரிகை சுதந்திரத்தை மதச்சார்பற்ற ஜனதா தளம் நசுக்க முயற்சிப்பதாக கூறினார். 28 மக்களவை தொகுதிகளில், 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றி, வரலாற்று வெற்றி பெற்றிருப்பதாக கூறிய எடியூரப்பா, இது சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு சிறந்த தருணம் என்றார்.
பாஜக எம்.எல்.ஏக்கள் யாரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தொடர்பில் இல்லை என்றும், முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு, தானாகவே கவிழும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post