நியூசிலாந்தில் 2019 புத்தாண்டு பிறந்தது: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

நியூசிலாந்தில் 2019 புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, மக்கள் ஆட்டம், பாட்டம் வானவேடிக்கயுடன் கோலாகலமாக கொண்டாடினர்.

2019 புத்தாண்டு பிறந்ததையடுத்து நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாண்டையொட்டி கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. நியூசிலாந்து மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கூறி மகிழ்ந்தனர். இதையடுத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன், பாமர்ஸ்டன் நகரிலும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Exit mobile version