யாத்ரா திரைப்படத்திற்கு தடை: 6 ம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யாத்ரா படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

70 எம் எம் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள யாத்ரா திரைப்படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். ஆந்திர அரசியலில் பாத யாத்திரை மூலம் அரசியலில் மிகப் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டவர் ராஜசேகர ரெட்டி, இதனால் இந்த படத்திற்கு படக்குழுவினர் யாத்திரா என்று பெயரிட்டனர். இந்த படம் ரிலீஸாவதற்கு தயாரான நிலையில் ஸ்ரீசாய் லட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த யாத்ரா என்ற படத்தலைப்பினை கடந்த 2015 ஆம் ஆண்டே பதிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தடை கோரியிருந்தனர். இதனால் இந்த வழக்கில் வரும் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க 70 எம் எம் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version