தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் நடிக்கிறார்கள். சிறப்பான பெயர் பெறுகிறார்கள். தொடர்ந்து வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் 29 ஆண்டுகளாக ஒரு மனிதன் தல எனும் பெயரோடு ரசிகர்கள் மனதில் முடிசூடா மன்னனாக இருக்கிறார் என்றால் அது நம்ம அஜித்குமார் தான். அது ஏன்? மேலும் அவர்பற்றி நாம் அறியாத சில தகவல்களையும் பார்க்கலாம்
#1
ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரினு சொல்லுவதோடு நிறுத்துவார்கள் பலர். ஆனால் தன் திரைப்படங்களில் வரும் ஆபத்தான சண்டைக்காட்சிகளை தானே டூப் போடாமல் தானே நடிக்கும் பழக்கம் தல அஜித்தின் தனிப்பெரும் குணம்.
கேட்டால், மக்கள் கைதட்டுவது எனக்காகத்தான். டூப் போடும் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இல்லையே?. அதுபோக அதிக சம்பளம் வாங்குவதும் நான்தான். அதனால் இதையெல்லாம் நானே செய்வது தான் சரி என்று விளக்கம் தந்தாராம் தல.
#2
பில்லா படத்தை அஜித்தை வைத்து ரீமேக் செய்வதற்கு டபுள் சந்தோஷத்தோடு டபுள் ஓகே சொன்னாராம் ரஜினி.
இது ரஜினியால் வெற்றி பெறும் என்று செய்தி வெளியானது. ஆனால் படம் வெளிவந்த பிறகு முற்றிலும் வேறுவிதமாக அதகளம் செய்திருந்தார் அஜித். இதற்காக இவர் மேற்கொண்ட கடும்உழைப்பு தான் பில்லா எனும் கதை, ரஜினி என்னும் முகம் ஆகிய இரு பேசுபொருள்களை கடந்து அஜித் என்ற ஆளுமையே பில்லா வின் வெற்றிக்கு காரணம் என்று மாற்ற வைத்தது.
#3
அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரை அஜித் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை. எம் ஜி ஆருக்குப் பிறகு செல்வாக்கும் அந்த முக வசீகரமும் கொண்ட நடிகராக அஜித் இருக்கிறார் என்று கருத்து சொன்னார் அரசியல் சாணக்யன் சோ.ராமசாமி.
அம்மாவின் மறைவுக்கு பிறகு அடுத்த முதல்வர் என்றும் கூட பேசத் தொடங்கினர் நெட்டிசன்கள். ஆனால், வழக்கம் போலவே இந்த செய்தியையும் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டார் தல.
அந்த நேரத்தில் விவேகம் படப்பிடிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#4
திரைக்கும் ரசிகர்களுக்கும் சரியான திருப்தியை தருவது போலவே குடும்பத்திற்காக நேரம் செலவிடுவதிலும் நம்ம தல படு பர்ஃபெக்ட்.
தேசிய அளவில் கவனிக்கப்படும் ஒரு ஹீரோ தன் மகளுக்காக டயர் ஓட்டி விளையாடும் காட்சி எப்போதும் ரசிகர்கள் மனதில் எவர்கிரீன்..
#5
நம்பினால் நம்புங்கள்.. அஜித்துக்கு முதல் படம் அமராவதி இல்லை…அதுதான் தெரியுமே என்று சிலர் இப்போது தெலுங்கில் வந்த பிரேம புத்தகம் என்பார்கள். ஆனால் அதுவும் இல்லை. நதியாவும் சுரேஷும் நடித்து 1990 ல் வெளிவந்த என் கணவர் என்வீடு திரைப்படம்தான் அவரது முதல் படம்.
பள்ளி செல்லும் சின்னப்பையனாக அஜித் நடித்திருக்கும் இந்தபடத்தை செண்பகராமன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#6
அஜித்தால் நிராகரிக்கப்ட்ட ஏராளமான படங்கள் தமிழ் சினிமாவில் அதிரிபுதிரி ஹிட்.நந்தா, கஜினி, காக்க காக்க மற்றும் சாமி ஆகிய படங்கள் அஜித்தால் நிராகரிக்கப்பட்டு பின் வேறு ஹீரோக்களுக்கு கொடுக்கப்பட்டவை.
பாலாவின் தனித்துவமிக்க படைப்பான “நான் கடவுள்” படமும் கூட அஜித் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்கமுடியாமல்போனதுதான் என்பது கூடுதல் தகவல்
#7
அஜித்துக்கு தமிழே பேச தெரியாது என்பது ஆரம்பகாலத்தில் அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனம். ஆமாம்.. ஆரம்பகாலத்தில் அஜித் படங்களுக்கு வாய்ஸ் கொடுத்தது அஜித் இல்லை.
அப்படியென்றால் ?
அது நம்ம சியான்தான். அமராவதி, பாசமலர்கள் படங்கள் ல எல்லாம் அஜித்துக்கு டப்பிங் பேசினது சியான் விக்ரம்தான்
#8
அஜித்துக்கு திரைப்படத்தை விட மிகவும் பிடித்த விஷயம் ஒன்று உண்டு என்றால் அது டிரைவிங்தான். இதுதான் தெரியுமே என்கிறீர்களா? ஆமா அவருக்கு பைக், கார் ரேசிங் பிடிக்கும்னு உங்களுக்கு தெரியும்.
ஆனால் போர்ப்படை விமானங்களை இயக்கவல்ல திறமை படைத்தவர் என்பதும்,
அங்கீகரிக்கப்பட்ட ஃபைட்டர் ஜெட் பைலட் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்
#9
தல குடும்பம் என்றால் தலயும், ஷாலினியும், குட்டி தல ஆத்விக்கும்,குட்டி ஷாலினி அனோசுகா வும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம்..
அஜித்தின் அம்மா, அப்பாவுக்கு மட்டுமல்லாமல் அவர் அஜித்துக்கு 2 சகோதர்களும் 2 சகோதரிகளும் இருந்தனர். இரட்டையர்களான இந்த 2 சகோதரிகளும் சிறுவயதில் இறந்துவிட, சகோதரர்கள் இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர்.