108 MP கேமரா, 12GB RAM மிரட்டும் Xiaomi Mi Mix Alpha ஸ்மார்ட்போன்

ஒரு கைபேசியில், அதன் முன்பக்க அளவைப் போல 180% பெரிய டிஸ்பிளே இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு டிஸ்பிளேவோடு 108 மெகா பிக்ஸல் கேமரா, 12GB RAM ஆகியவற்றையும் கொண்டு சந்தைகளில்  கலக்கி வருகிறது ஷியோமி மிக்ஸ் ஆல்ஃபா.

கனவுகளில் இருந்து தயாரித்த கைபேசியைப் போல இருக்கின்றது ஷியோமி நிறுவனத்தின் மிக்ஸ் ஆல்ஃபா கைபேசி. இதன் மொத்தப் பரப்பில் 180% இடம் வெறும் டிஸ்பிளே மட்டும்தான். அதாவது முன்புறம் முழுவதும், இரண்டு பக்கவாட்டுப் பகுதிகள், பின்புறத்தில் பெரும் பகுதி ஆகியவை அனைத்தும் இணைந்து ஒரே டிஸ்பிளே பகுதியாக உள்ளன. இந்த டிஸ்பிளே பகுதியின் மொத்த அளவு 7.92 இன்ச் ஆகும். இதற்காக மடங்கும் டிஸ்பிளேவை உருவாக்க ‘பிளக்ஸிபிள் ஓஎல்ஈடி’ – என்ற நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 20% இடத்தில் ஒரு பட்டை உள்ளது. அதில் 3 கேமராக்கள் உள்ளன. இதில் பிரதான கேமரா 108 மெகா பிக்ஸல் திறனைக் கொண்டது. இதன் மூலம் எடுக்கப்படும் ஒரு புகைப்படம் 40 மெகா பைட் அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும். இரண்டாவதாக 20 மெகா பிக்ஸல் திறன் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. மூன்றாவதாக 12 மெகா பிக்ஸல் திறன் கொண்ட டெப்த் சென்சார் கேமரா உள்ளது. போனின் ஆண்டெனா உள்ளிட்ட பகுதிகளும் இந்தப் பட்டையில்தான் உள்ளன.

 

12 ஜிபி ராம், 512 ஜிபி இண்டர்னல் மெமரி, 5ஜி தொழில்நுட்பம் என்று மிரட்டும் மிக்ஸ் ஆல்ஃபா கைபேசியில் எந்த பட்டன்களும் கிடையாது, அனைத்தையும் டச் ஸ்கிரீன் மூலம்தான் இயக்க வேண்டும். 

ஷியோமி நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குக் கடுமையாக உழைத்து சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்தக் கைபேசியை உருவாக்கி உள்ளனர். ‘108 மெகா பிக்ஸல் கேமராவோடு விரைவில்  ஒரு கைபேசி வருகிறது’ – என்று மட்டும் இதற்கு முன்பு சொல்லி வந்த ஷியோமி நிறுவனம், அந்தக் கைபேசியின் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள மிக்ஸ் ஆல்ஃபா கைபேசி சந்தையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சீனாவின் சந்தையில் மிக்ஸ் ஆல்ஃபா கைபேசிகள்இந்திய  மதிப்பில் சுமார் 2 லட்சத்திற்கு விற்கப்படுகின்றன. உடனே இவை அதிக அளவில் சந்தைக்கு வராது என்றே தெரிகின்றது. இவற்றின் உற்பத்தி அதிகரித்து விலையும் குறையும் போது நவீன உலகின் சூப்பர் ஃபோனான மிக்ஸ் ஆல்பா அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறவே அதிக சாத்தியங்கள் உள்ளன.

 

“Xiaomi Mi Mix Alpha” சிறப்புகள்:

Android processor Cpu: Qualcomm Snapdragon 855+
Android Version: Android 9.0 Pie
Display Size: 7.92 inch
RAM: 12GB
Memory: 512 GB 
Front Camera: No
Back Camera: 108MP + 12MP + 20MP
Battery Capacity: 4050mAh

Exit mobile version