மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு தெரியாமல் கர்நாடகாவிற்கு ஒப்புதல் அளித்தது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேகேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கர்நாடக அரசும் திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் மேகேதாட்டு அணையை கட்ட கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், மேகேதாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறவில்லை என்று கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசுக்கு தெரியாமல், மேகேதாட்டு அணையின் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது தவறு என்று தெரிவித்தார்.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறவில்லை என்று கர்நாடக அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும், இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேகேதாட்டு அணைகட்ட அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.