தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வை 40ஆயிரம் பெண்கள், 20 திருநங்கைகள் உள்பட மொத்தம் 3 லட்சத்து 22ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 228 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தேர்வு எழுதும் மையங்களில் பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்து நடைபெறும் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்பர். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.