விரேந்திரகுமார், நரேந்திர குமார் உள்ளிட்டோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்க இந்திய மல்யுத்த பெடரேசன் பரிந்துரை செய்துள்ளது.
மல்யுத்த வீரர்கள் ஹர்பிரீத் சிங், திவ்யா கேக்ரன், பூஜா தண்டா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல விக்னேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரேந்திர குமார், நரேந்திர குமார், சுஜித்மான், விக்ரம் குமார் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்க மல்யுத்த பெடரேசன் பரிந்துரைத்துள்ளது. பீம்சிங், ஜெய் பிரகாஷ் ஆகியோர் தயான் சந்த் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்