பெண்கள் ப்ரீமீயர் லீக் போட்டியில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஸ்னேஹ் ரனா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். தொடக்கமே குஜராத்திற்கு பேரிடி ஒன்று காத்திருந்தது. அவர்களின் தொடக்க ஆட்டக்காரர் மெக்ஹானா 8 ரன்னில் வெளியேறினார். ஆனால் இரண்டாம் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சோபியா டங்க்லே மற்றும் ஹென்றி தியோல் பலமான பார்டனர்ஷிப்பினை அமைத்தனர். அவர்கள் முறையே 65 மற்றும் 67 ஆகிய ரன்களை எடுத்தனர். பிறகு வந்தவர்கள் பெரிதாக ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. இருப்பினும் இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்த்தனர். பெங்களூர் சார்பாக ஹீதர் க்நைட் மற்றும் ஷ்ரேயங்கா பட்டீல் அதிகபட்சமாக தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் 202 என்கிற கடின இலக்கைத் துரத்தும் நோக்கில் களமிறங்கிய பெங்களூர் அணியில் ஸ்மிருதி மந்தனா 18 ரன்னில் வெளியேறினார். ஷோபி டிவைனும், எல்லீஸ் பெரியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் முறையே 66 மற்றும் 32 ரன்னில் வெளியேறினார்கள். ஹீதர் க்நைட் சற்று அதிரடி காட்டினார். அவர் 11 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவருக்கு யாரும் பக்கபலமாக இல்லாததால் இருபது ஓவர் முடிவில் பெங்களூர் அணியினால் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குஜராத் அணியினர் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ப்ளேயர் ஆஃப் த மேட்சினை சோபியா டங்க்லே பெற்றார். இதன் மூலம் குஜராத் அணி ப்ரீமியர் லீக்கின் முதல் வெற்றியைப் பெற்றது. ஆனால் ஆர்சிபி அணி இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.