வெனிஸ் நகரத்தில் 50 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பெய்ததால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் வெனிஸ் நகரம் அமைந்துள்ளது. நகரின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் சுமார் 6 அடி உயரத்துக்கு அலைகள் வீசியுள்ளன. இதனால் நகரில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அலைவீச்சில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த நகரின் அவசரகால சேவைக் குழு ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்ததால் அந்த நகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.