உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 16 ஆயிரத்து 81 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது. பிரான்சில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 869 பேருக்கும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவில் 81 ஆயிரத்து 953 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு குறைந்ததால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதேபோன்று, இங்கிலாந்து, ஈரான், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version