கொரோனா வைரஸால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா வைரஸால் உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்தது.  கொரோனா தொற்று நோயால் தற்போது வரை அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா. அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது. 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 65க்கு மேற்பட்டோரும், பிரான்சில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் மூவாயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 295 ஆக உள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Exit mobile version