உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்தது!

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,000 தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரசால் 38,974 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. ஸ்பெயினில் 20,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில், 1,94,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,000த்தை தாண்டியுள்ளது. பிரான்சில் 1,51,000 பேரும், ஜெர்மனியில்  1,43,000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 15,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,14,000த்தை கடந்துள்ளது. சீனாவில் புதிதாக உயிரிழப்பு இல்லாத நிலையில், 82,719 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஈரான், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

Exit mobile version