உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 93 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில், 3 ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிரேசிலில் 2 லட்சத்து 93 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், ஸ்பெயினில் 2 லட்சத்து 79 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கிலாந்தில் 2 லட்சத்து 48 ஆயிரம் பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரும், பிரான்சில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Exit mobile version