உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் வோயேஜர் ஸ்டேஷன்!

விண்வெளியில் கட்டப்பட்டு வரும் 400 அறைகள் கொண்ட, நவீன ஹோட்டலில் தங்குவதற்கு மூன்றரை நாட்களுக்கு 36 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் ஸ்டேஷனின்(Voyager Space) ஹோட்டல் கட்டுமானப் பணிகள் வரும் 2025ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹோட்டலில் தங்கும் அறைகள், சினிமா திரையரங்கு, மதுக்கூடம், மசாஜ் கிளப் என ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன.

ஒரே நேரத்தில் 400 பேர் வரை தங்கும் வசதிக்கொண்ட இந்த ஹோட்டலுக்கு 2027ம் ஆண்டு முதல் , மனிதர்கள் செல்ல முடியும் என்று ஆர்பிட்டல் நிறுவனம் கூறியுள்ளது. இந்த 24 ஒருங்கிணைந்த வாழ்விடங்கள் ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும்.

செயற்கை ஈர்ப்பை உருவாக்கும் விதமாக பெரிய வட்டமாக சுழலும் விண்வெளி ஹோட்டல், சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு சமமாக அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு செல்வதற்கான மூன்றரை நாட்கள் பயணத்துக்கு 36 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version