உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்

செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளரை சீன செய்தி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இந்த ரோபோ குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது பார்கலாம்…..

தற்போது சீனா மொழியில் செய்தி அறிக்கையை வசித்துக் கொண்டிருப்பது, மனித உருவில் இருக்கும் பெண் ரோபோ. செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சியும் தொழில் நுட்பமும் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், தற்போது ஊடக துறையிலும் கால்பதிக்க தொடங்கியுள்ளது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். ஜின் ஜியோமெங் என பெயர் சூட்டப்பட்ட இந்த பெண் ரோபோ, சரியான உச்சரிப்புடன் செய்தியை தெளிவாக வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றதையடுத்து, ஜின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் அடுத்த மாதம் இந்த பெண் ரோபைவை அறிமுகப்படுத்த உள்ளது. இதே நிறுவனம் கடந்த ஆண்டு செய்தி வாசிக்கும் ஆண் ரோபை உருவாக்கி வரவேற்பை பெற்றது. அத்துடன் இந்த ஆண் ரோபோ விரைவில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் அதை அறிமுகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதேபோல் ஜின் ஜியோமெங் என்ற பெண் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் வருகிற மார்ச் மாதம் நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிகழ்வினை செய்தியாக வாசிக்க, இப்பெண் ரோபோ தயாராகி வருகிறது. தற்போது சீன மொழியை தொடர்ந்து ஆங்கிலத்திலும் இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனமும், ஷோகு நிறுவனமும் இணைந்து உருவாக்கிய இந்த பெண் ரோபோ, மற்ற நாட்டு ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Exit mobile version