உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள ராயல் பல்கலைகழத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பூடானுக்கு யார் வந்தாலும் அதன் இயற்கை அழகு,ரம்மியம், மக்களின் எளிமை ஆகியன அனைவரையும் கவரும் எனவும் பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய பிணைப்பு இருப்பது இயற்கையானது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறிய மோடி, இத்திட்டம் 500 மில்லியன் இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டை வழங்கி உள்ளது என தெரிவித்தார். உலகிலேயே மிக குறைந்த விலையில் டேட்டா இணைப்பு இந்தியாவில் கிடைக்கிறது எனவும் இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானவர்கள் பலனடைந்துள்ளதாக பேசியுள்ளார்.

Exit mobile version