உலககோப்பை: இங்கிலாந்து-வங்கதேசம், ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

12வது லீக் போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மோர்தசா தலைமையிலா வங்கதேச அணியும் இன்று பிற்பகல் 3 மணிக்கு சோபியான் மைதானத்தில் விளையாட உள்ளன. லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாலை 6 மணிக்கு நடைபெறும் 13வது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

Exit mobile version