உலகம் முழுவதும் இயற்கையாகவும், செயற்கையாகவும் பல சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. ஆனால் சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் செய்யும் தவறுகளால் அங்குள்ள இயற்கை வளங்களும், உயிரினங்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கின்றன. அதில் சில இடங்களில் பொதுமக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டன.
கொமோடோ தீவு, இந்தோனேசியா:
இத்தீவில் தான் உலகின் மிகப்பெரிய பல்லி இனங்கள் வாழ்கின்றன. இவற்றை பாதுகாக்கும் பொருட்டு 2020ம் ஆண்டு ஜனவரி முதல் கொமோடோ தீவுக்குள் சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை செய்வதாக இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது. இவற்றிற்கு காரணம் அதிகமாக சுற்றுலா பயணிகள் பல்லி இனங்களை வேட்டையாடப்படுவதாக நம்பப்படுகிறது. மேலும் குறைந்தது 1 வருட காலமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாயா பே, தாய்லாந்து:
பரோ தீவுகள், டென்மார்க்
பரோ தீவுகள் வடக்கு அட்லாண்டிக்கில் அழகுக்காக புகழ்பெற்றவை. அந்த ஒரு காரணத்திற்காகவே இந்த இடம் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு பரோ தீவுகள் பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது.
Fjadrargljufur பள்ளத்தாக்கு, ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து நாட்டை சுற்றிப்பார்க்க விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். 2017ல் இந்த பள்ளத்தாக்கு அதிகப்படியான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனால் இந்த இடத்தை மீட்டெடுப்பதற்காக சில முறை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.