உடலுக்கு வலு சேர்க்கும், நீச்சல் கற்றுக்கொள்ளுதல் தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது.
நமது உடலின் வெளி உறுப்புக்கள் மட்டும் இன்றி, உள் உறுப்புகளுக்கும் வலு சேர்க்கும் நீச்சல் பயிற்சி, சில நேரங்களில் தற்காத்துகொள்ளவும் உதவுகிறது. 5 வயது குழந்தை முதல் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வரை, நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம்.
நீச்சல் பயிற்சியை மேற்கொள்வதால், மூச்சுத் திணரல், அதீத உடல் எடை, மூட்டு வலி உள்ளிட்ட பல உடல் உபாதைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது. பலர், கை, கால், முதுகு வலி என அனைத்திற்கும் தனித்தனி உடற் பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், நீச்சல் ஒன்று மட்டும் செய்தாலே போதும், உடல் முழுவதும் நல்ல புத்துணர்சியும், பலமும் கிடைக்கும் என்கின்றனர் நீச்சல் பயிற்சியாளர்கள்.
இந்த நீச்சல் பயிற்சியை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக, உலக நீச்சல் கற்றுக்கொள்ளுதல் தினம் கொண்டாடப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் நீச்சல் கற்று வருகின்றனர்.