ஊரடங்கை தளர்த்தினால், மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்துவது, கொரோனா வைரஸ் மறு எழுச்சிக்கு வழி வகுக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ஊரடங்கை திறம்பட நிர்வகிக்கத் தவறினால் மாறுபாடான எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் டெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.