உலக அமைதி தினம் இன்று – சிறப்பு தொகுப்பு

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 21 ஆம் தேதி உலக அமைதி தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டுவருகிறது.  

உலக நாடுகளில் அஹிம்சை மற்றும் சமாதானத்தை நிலைநாட்டி, தீவிரவாதம், போர் போன்ற தவறான செயல்களில் இருந்து விடுபட்டு, உலக நாடுகளில் அமைதி நிலவ ஐநா சபையானது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அமைதி தினத்தை கடைப்பிடிக்கிறது.

இன்றையை தினம் உலக அமைதி தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. புதியதோர் உலகம் செய்வோம்-கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப இந்த அற்புதமான உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட, நமக்கு வேறென்ன பெருமை இருந்துவிடப்போகிறது.

உலக அரங்கில் அமைதியை தொடர்ந்து காத்து வருவதில் இந்தியாவிற்கு நிகர் இந்தியா தான். மற்ற நாடுகள் எல்லாம் சுதந்திரம் பெற போர் போன்ற தீவரவாத செயல்களில் ஈடுபட்ட போதே அஹிம்சை என்ற அமைதியின் வழியில் சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா.

இந்தியாவில், பல மாநிலங்கள், பல மொழி பேசுபவர்கள் மற்றும் பல மதத்தினர் இருந்தாலும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கைதான், இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது. இதனால் உலக அரங்கில் இந்தியா, தலை நிமிர்ந்து நின்று, மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. 1956 – ஆம் ஆண்டு ஐநா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பது, இந்த அமைதி தினத்தில் நாம் அனைவரும் எண்ணி பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும். வரும்காலங்களில் ஒவ்வொரு நாளுமே, உலக அமைதிநாள்தான் என்ற மனநிறைவோடும், நிம்மதியோடும் கொண்டாட வேண்டும். இதுவே நம்மை வாழவைக்கும் இந்த உலகத்தை, நாம் வாழவைக்கும் முறை. ஓவ்வொரு மனமும் மாறும்போது, உலகமும் மாறும் என்ற நம்பிக்கையோடு நாமும் இந்த அமைதி நாளில் உலக அமைதிக்கு வழிவகுப்போம்…

Exit mobile version