80s,90s ,2k கிட்ஸ்ன்னு மனுஷங்களை பிரிச்சி வச்சிருக்கிற இந்த உலகம் “லவ்வர்ஸ் டே” கொண்டாட தயாராகிட்டு. இன்டெர்நெட்டே ஏன்டா வந்தோம்ன்னு அழுற அளவுக்கு அலப்பறை குடுக்குற அளவுக்கு போட்டி போட்டு தயாரா இருக்காங்க நம்ம மக்கள்ஸ்..
உலகத்துல உள்ள எல்லோராலும் ஒரு சில நிகழ்வுகளை மட்டும் தான் ஒன்னா கொண்டாட முடியும். அதுல ஒன்னு இந்த காதலர் தினம்.இது யார் சொல்லியும் நமக்குள்ள வர்றது இல்ல.அதுவாகவே நமக்குள்ள தோணுற ஃ பீலிங்…அப்படியே பூமிக்கும் வானத்துக்கும் தன்னை மறந்து மிதக்கிற சந்தோசம். “நமக்கு நாமே” அப்படிங்கிற மாறி சிரிப்போம்.
இன்னிக்கு இருக்குற 2.0 வெர்ஷனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்ல லவ்வ சொல்லி அதுக்கு “HMM”ன்னு ஒரு ரீப்ளையும் வாங்குற இந்த 2k கிட்ஸ்க்கு தெரியாது 80s ,90sவோட ப்ரோபோசல்ஸ்.சொல்லப்போனா காதலை சொல்ற இந்த 80s ,90s அத்தனை பேருக்குள்ளேயும் அந்த காலத்துல வெளியான படங்களோட லவ் ப்ரோபசல் சீன் தான் உள்ளுக்குள்ள ஓடும். நேர்ல பேசக்கூட தைரியம் வராது அவங்களுக்கு.
எந்த நேரத்துல தன்னோட ஆள் வெளிய வருவான்னு தெரியாம ரோடு ரோடா வெயிட் பண்ணிட்டு சுத்துனவங்களை, இன்னிக்கு டே பிளான் போட்டு மீட் பண்ற லவ்வர்ஸ்க்கு தெரியாது.
தான் லவ் பண்றவங்களுக்கு என்ன பிடிக்கும்ன்னு கேக்குற ஒவ்வொன்னா கேட்டது அவங்கன்னா, இன்னிக்கு ஒட்டுமொத்தமா யாரோ கிளப்பிவிட்ட forward மெசேஜ் தெரிஞ்சிக்கிறாங்க இவங்க.
யாருக்கும் தெரியாம மீட் பண்ண டிரை பண்ணவங்க அவங்கன்னா, மீட் பண்றதுக்கே எல்லார்கிட்டயும் சொல்லிட்டு பண்றவங்க இவங்க.
டிவியில லவ் சாங் ஓடுறப்பல்லாம் தன்னோட ஆள் நியாபகம் வந்தா 80s,90s கிட்ஸ். அதே லவ் சாங் ஸ்டேட்டஸ் வச்சி உன் நியாபகமா வந்துச்சின்னு சொன்னா 2k கிட்ஸ்.
லவ்வர்ஸ் டே இன்னிக்கு கிரீட்டிங் கார்டு கொடுத்தவங்க நம்ம 80s,90s மக்கள்ன்னா, எத்தனை வருஷ லவ்வோ அத்தனை கிப்ட் கொடுக்குறவங்க நம்ம 2k மக்கள்.
இப்படி 80s,90s ,2k கிட்ஸ்-ன் எண்ணமும், செயலும் வேற வேறன்னாலும் அவங்களோட ஒரே நோக்கம் “காதல்”ல ஜெயிக்கிறது.
நம்மோட எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் வண்ணமாக மாற்ற ஒரு துணை கிடைத்துவிட்டால், அந்த வாழ்க்கை நாம் பேசும் மொழிப் போல் அமுதமாய் இனிக்கும்.
எது எப்படியோ லவ் பண்ணி சக்ஸஸ் ஆனவங்க, லவ் பண்ணிகிட்டே இருக்குறவங்க, இனிமே தான் அந்த உலகத்துல குதிக்கப் போறேன்னு சொல்ற எல்லாருக்கும் முதலில் ” வாழ்த்துக்கள்”.