வரும் மே 31ல் உலகம் முழுவதும் வெளியாகிறது இயக்குநர் செல்வராகவன்- நடிகர் சூர்யா கூட்டணியில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான “என்ஜிகே” திரைப்படம். இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அரசியலை மையமாக வைத்து வெளியாகும் இத்திரைப்படம் சூர்யாவுக்கு மீண்டும் வெற்றியை கொடுக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே ஒரு மாதத்திற்கு முன்னதாகவே என்ஜிகே திரைப்படத்திற்கான பிரமோஷன்கள் தொடங்கின. அதில் ஹைலைட்டாக ட்விட்டரில் “என்ஜிகே” எமோஜிக்கள் செம வைரலாகின.தியேட்டர்களிலும் முன்பதிவு ஆரம்பித்து விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யாவின் ரசிகர்கள் என்ஜிகே படத்திற்காக உலக சாதனையை புரிந்துள்ளனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உலகிலேயே மிக உயரமான கட்அவுட் வைத்து சாதனை புரிந்துள்ளனர். இந்த ஆண்டில் வெளியான அஜித்தின் “விஸ்வாசம்” படத்திற்கு அவரின் ரசிகர்கள் முதல்முறையாக 190 அடியில் கட்அவுட் வைத்து அசத்தினர். ஆனால் அதனை சூர்யாவின் ரசிகர்கள் 4 மாதங்களில் முறியடித்துள்ளனர்.
215 அடியில் நடிகர் சூர்யாவிற்கு கட் அவுட் வைப்பதற்கான பணிகள் சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதனால் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளி கட் அவுட் சாதனையில் சூர்யா முதலிடம் பிடித்துள்ளார்.