உலக மக்கள் தொகை தினம் இன்று…

உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை காணலாம்….

ஜூலை 11ம் தேதியை , உலக மக்கள் தொகை தினமாக, 1987ஆம் ஆண்டு அறிவித்தது ஐ.நா.சபை .

மக்கள் தொகையில் 137கோடியை எட்டிப்பிடித்து, உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது சீனா .

இதையடுத்து 135கோடிக்கும் மேலான மக்கள் தொகையோடு அடுத்த இடத்தை அபகரித்துள்ளது இந்தியா.

நம் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்திரப்பிரதேசமும் , குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிமும் இருக்கிறது.

இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற விகிதம் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 80.33% எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். தென்னிந்தியாவை பொருத்தவரை தமிழ்நாடு, கேரளாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகவே உள்ளது.

அமெரிக்கா, இந்தோனேசியா,பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள் தொகை முழுவதையும் கூட்டினால் கூட, அதைவிட அதிகமாக நம் நாட்டின் மக்கள் தொகை இருக்கிறது.

விரைவில், அதாவது 2027க்குள்ளாகவே, நம் நாடு சீனாவை விஞ்சி, உலகின் முதலிடத்தை எட்டிப்பிடிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதே சமயம், 2060 க்குப்பின், உலக அளவில் மக்கள் தொகை குறையவும் கூட சாத்தியக்கூறு இருப்பதாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது..

சுற்றுச்சூழல் மாசுபாடு, நோய்தொற்று, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் போன்றவற்றால், மனிதனின் ஆயுட்காலம் குறையும் என்பதும் இதற்கொரு காரணமாக சொல்லப்படுகிறது.

இன்னும் நம் நாட்டில் வறுமை முழுமையாக ஒழியாத நிலையில், பெருகி வரும் மக்கள் தொகை , நம் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

இதை தடுக்க பொதுமக்களிடையே, பிறப்பு வீதத்தை குறைத்தல், கல்வி வளர்ச்சி, வறுமை நீக்கம், திருமண வயதை உயர்த்துதல் இவை சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் செயல்பட வேண்டியது அவசியமாகிறது..

Exit mobile version