உலக அமைதியை வலியுறுத்தி நடந்த குடார் திருவிழா

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில்  உலக அமைதி வேண்டியும் கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்பங்களை விரட்டவும் வேண்டி புத்த மதத்தவர் வழிபாடு நடத்தினர்

திபெத்தை பூர்விமாக கொண்ட புத்த பீட்சுக்களால் இந்த திருவிழா நடத்தப்பட்டது. குடார் என அழைக்கப்படும் இந்த திருவிழாவில் திபெத்தின் பல்வேறு பகுதிகளிலிந்தும் வந்த புத்த பிட்சுக்கள் பங்கேற்றனர்.  சாம் நடனம் என அழைக்கப்படும் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த திருவிழாவில் கெட்ட சகுனங்களை ஏற்படுத்தும் பொருட்களை நெருப்பில் எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக புத்த பீட்சுக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version