உலக மன நோய் தினம் இன்று அதன் சிறப்பு தொகுப்பு

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10ஆம் தேதி, உலக மன நல தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனம், அக்டோபர் 10ம் தேதியை, உலக மனநல தினம் என அறிவித்துள்ளது. உடலும் மனமும் ஒன்றொடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால், அது மனதை பாதிக்கும்.. அதே போல், மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும். மன நலத்தின் முக்கியத்துவம் பற்றியும், ஜோதிடத்திற்க்கும் மன நலத்திற்க்கும் உள்ள தொடர்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதே, உலக மனநல நாளின் முக்கிய நோக்கமாகும்.

மனநல பாதிப்பு என்பவை, தனிமை, விரக்தி போன்ற மனதளவில் பாதிப்படைய செய்யக்கூடிய ஒரு மன அழுத்தம் ஆகும். மேலும் கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள், அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள்தான் மனநோய்க்கு அதிகளவில் ஆளாகின்றனர். தொடர்ச்சியான அதே வாழ்க்கை முறை அவர்களை நசுக்குகிறது.

கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில்தான் அதிகளவில் மனநோயால் பாதிப்படைபவர்கள் உள்ளனர் என கூறப்படுகிறது. மனநல பாதிப்பை நோய் என சொல்லவும் முடியாது. அது ஒவ்வொருவரின் மன நலம் சார்ந்தது. அதை மருந்து, மாத்திரை கொண்டு சரிச் செய்ய முடியாது. பிறர் காட்டும் அன்பே, அதிலிருந்து விடுபட சிறந்த மருந்து. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தி, ஊக்குவித்து, அவர்களின் சோம்பலை போக்கி, மனக் காயத்தை துடைத்தால், மனிதர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாவதை தடுக்க முடியும்.

Exit mobile version