ஒடிசா கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தைவான் அதிபர் சாய்-இங் வென், இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிப்படைந்த அனைவருக்காக வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பியா கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல், இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், பாதிப்படைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடர்கள் இந்நேரத்தில் இந்தியாவுடன் இருப்பதாகவும், தங்கள் நெருக்கமானவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜப்பான் அரசு சார்பாக ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா, ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது எனவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் எனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரயில் விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post