கொரோனா வைரஸ் காரணமாக கை குலுக்கி வந்த பன்னாட்டுத் தலைவர்கள் தற்போது இந்திய முறைப்படி வணக்கம் வைத்து வருகின்றனர்.
கொரோனா அச்சம் உலக தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. சீனாவின் வுகான் நகரில் கால்களால் ஒருவருக்கொருவர் தட்டிக் கொண்டு வணக்கம் வைத்தாலும், தற்போது அவர்கள் இந்திய முறைப்படி இரு கரம் கூப்பி வணக்கம் வைக்கும் முறைக்கு மாறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப் அயர்லாந்து பிரதமரை வரவேற்கும் போது கை கூப்பி வரவேற்றார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், ஒரு பிரமுகரை வரவேற்கும் போது கை கூப்பி வரவேற்றுள்ளார்,இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் பென் ஜமின் நெதன்யாகும் கைகூப்பி வரவேற்க தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதே முறையினைதான் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான்,ஸ்பெயின் மன்னர் பிலிப்புஸ் பின்பற்றி வருகிறார்.. கொரோனா அச்சம் காரணமாக வணக்கம் வைக்கும் இந்திய முறை உலக அளவில் பரவியுள்ளது…