உலக சுருள்வாள் போட்டியில் தங்கம் வென்ற விவசாய தொழிலாளி மகன்

மலேசியாவில் நடைபெற்ற சுருள் வாள் வீச்சு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் வீரர் சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணிகண்டனின் தந்தை விவசாயமும், அவரது தாயார் டீக்கடையும் நடத்தி வருகின்றனர். வீரமணிகண்டன் சிறு வயதில் இருந்தே சிலம்பாட்டத்தில் கவனம் செலுத்தி கடின பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நாகர்கோவிலில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையேயான 4வது சாம்பியன் சிலம்பாட்ட போட்டியில் வீரமணிகண்டன் கலந்துகொண்டு தங்கம் வென்றதன் மூலம்
மலேசியாவில் நடந்த முதல் உலக சாம்பியன் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றார். கடந்த 2ம் தேதி முதல் 6 ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற உலக சாம்பியன் சிலம்பபோட்டியில் சுருள்- வாள் போட்டியில் தங்கமும், குழு ஆயுதம் வீச்சு போட்டியில் 1 வெள்ளியும் பெற்று சாதனை படைத்துள்ளார். வீரமணிகண்டனுக்கு கிராம பொதுமக்களும், உறவினர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version